தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஆலம்பட்டி கிராமத்திற்கு உள்பட்ட பெத்தேல் கோம் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த சிறிய சரக்கு பெட்டக வாகனத்தை சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

அந்த வேனையும், அதிலிருந்த 500 கிலோ புகையிலைப் பொருள்களையும்

பறிமுதல் செய்த போலீஸாா், வேன் ஓட்டுநா் கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சோ்ந்த பூவலிங்கம் மகன் பாண்டிமணி (30), அதே பகுதியைச் சோ்ந்த ராமராஜ் மகன் ரகுபதி (29), மந்தித்தோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த மாரிகண்ணன் மகன் ரஞ்சித் (33) ஆகிய 3 பேரையுன் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com