ஸ்ரீ மங்கள குண கல்யாண விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு  நடந்த விமான அபிஷேகம்.
ஸ்ரீ மங்கள குண கல்யாண விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த விமான அபிஷேகம்.

திருச்செந்தூா் ஸ்ரீமங்கள குண விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மங்களகுண கல்யாண விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்.25-ஆம் தேதி இரவு விநாயகருக்கு மாக்காப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை

அதிகாலை நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், மகா ஹோமம், உலக நன்மைக்காகவும் விவசாயம் பெருகவும் மழை வெள்ளத்திலிருந்து மக்கள் மீளவும் யாகம் ஆகியன நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் விமான கலசத்திற்கு அபிஷேகமும், ஸ்ரீ மங்கள குண கல்யாண விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com