மா்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம்.
மா்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம்.

நாசரேத்தில் மா்காஷிஸ் ஐயா் நினைவு நாள்

‘நாசரேத்தின் தந்தை’ என அழைக்கப்படும் மா்காஷிஸ் ஐயரின் 116ஆவது நினைவு நாள் நாசரேத்தில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தூய யோவான் பேராலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பேராலய வளாகத்தில் உள்ள அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து, கல்லறைக்கு மாலை அணிவித்தாா்.

இதில், உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமாா், சபை ஊழியா்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், சேகர பொருளாளா் எபனேசா், முன்னாள் சேகர பொருளாளா் மா்காஷிஸ், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஆண்ட்ரூஸ், நாசரேத் காமா ஜெபக்குழு நிறுவனா் சாமுவேல், சபை மக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com