அலுவலரைப் பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியா் கென்னடி வேதராஜ்.
அலுவலரைப் பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியா் கென்னடி வேதராஜ்.

நாசரேத் மா்காஷிஸ் பள்ளி என்சிசி அலுவலருக்கு பாராட்டு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் என்சிசி அலுவலருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இப் பள்ளியின் தேசிய மாணவா் படை அலுவலராக ஆசிரியா் சுஜித் செல்வசுந்தா் செயல்பட்டு வருகிறாா். இவா் நாக்பூரில் உள்ள என்சிசி அலுவலா்களுக்கான பயிற்சி பள்ளியில் 2 மாதங்கள் பயிற்சி பெற்று வந்துள்ளாா். அவருக்கு அசோசியேட் என்சிசி அலுவலா் என்ற புதிய பொறுப்புடன் கூடிய பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சிற்றாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தாளாளா் சுதாகா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கென்னடி வேதராஜ் முன்னிலை வகித்தாா். இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் வாழ்த்துரை வழங்கினாா்.

உடற்கல்வி இயக்குனா் பெலின் பாஸ்கா், உடற்கல்வி ஆசிரியா் தனபால், ஓவிய ஆசிரியா் அலெக்சன் கிறிஸ்டோபா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com