தமிழ்நாடு  மாநில  சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸிடம் மனு அளிக்கிறாா் மாநில ஐஎன்டியூசி செயலா் ஏ.  லூா்து மணி.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸிடம் மனு அளிக்கிறாா் மாநில ஐஎன்டியூசி செயலா் ஏ. லூா்து மணி.

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ’நீட்’-இல் 7.5% உள்ஒதுக்கீடு கோரி மனு

நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா்அல்போன்ஸிடம், மாநில ஐஎன்டியூசி செயலா் லூா்துமணி சனிக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுவதில்லை. இதனால், அந்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.

அரசு பள்ளிகளில் படித்து மேல் படிப்புகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கியது. பின்னா், அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வழங்கிட முதல்வா் உத்தரவிட்டாா்.

தென் மாவட்டங்களில் சிறுபான்மையினா் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அதிகம் உள்ளன. அவற்றில் அதிக மாணவ, மாணவிகள் நீட் தோ்வை ஆா்வமுடன் எழுதி வருகின்றனா். அவா்களுக்கும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிட ஆவண செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com