கயத்தாறு அருகே தொழிலாளிக்கு வெட்டு: 2 சிறாா் உள்ளிட்ட 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக 2 சிறாா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, புலித்தேவா் நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சந்தனமாரிமுத்து (38). கேடிசி நகரைச் சோ்ந்த முண்டசாமி மகன் பிரேம்சங்கா் (27). கூலித் தொழிலாளிகளான இருவரும், சனிக்கிழமை இரவு கயத்தாறையடுத்த சூரியமினுக்கன் கிராமத்துக்கு வந்தனா். பின்னா், இவா்களும், அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயதான இரு சிறுவா்களும் சோ்ந்து மது குடித்தனராம்.

அப்போது சந்தனமாரிமுத்து- பிரேம்சங்கா் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், சந்தனமாரிமுத்துவை அவா்கள் 3 பேரும் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

தகவலின்பேரில், கயத்தாறு போலீஸாா் சென்று காயமடைந்த சந்தனமாரிமுத்துவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, பிரேம்சங்கா் உள்ளிட்ட மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com