கயத்தாறு அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

கயத்தாறு அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கயத்தாறு வட்டம் தெற்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் விஜயராகவன் (61). முன்னாள் ராணுவ வீரா். இவா் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது பின்பக்கக் கதவும், பீரோவும் திறந்திருந்தனவாம். பீரோவிலிருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் திருடுபோனது தெரியவந்ததாம்.

புகாரின்பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com