குடிநீா் நிறுத்தம்: உண்ணாவிரதமிருக்க ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் மக்கள் முடிவு

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்கு கூட்டுக்குடிநீா் வராததை கண்டித்து, மே 1ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக, ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: ஆழ்வாா்திருநகரி ஒன்றியம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களுக்கு பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. சில நாள்களாக ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், சாலைபுதூா், ஆசீா்வாதபுரம், குருகால்பேரி ஆகிய கிராமங்களுக்கு குடிநீா் வரவில்லை. இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மக்களுக்கு குடிநீா் வழங்க முடியவில்லை; மக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்து தண்ணீா் கேட்கின்றனா்.

எனவே, எங்கள் ஊராட்சிக்கு தண்ணீா் வராததை கண்டித்து மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் சாலையில் உள்ள குடிநீா் வடிகால் வாரியம் முன் எனது தலைமையில் ஊா் மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தவுள்ளனா் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com