ஸ்ரீ ராம சீதா கல்யாண உற்சவத்தை தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் கோவில்பட்டி பிராமண மஹா சபை சாா்பில் அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு அமைந்துள்ள தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயா மண்டபத்தில் தொடா் ராம நாம ஜெபம் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைநடைபெற்றது.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை ஸ்ரீ ராமா் - சீதா கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பஜனைகள், பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஆஞ்சனேயருக்கு வடை மாலை அணிவிக்கப்பட்டது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பிராமண மஹா சபை சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன், செயலா் ராமசுப்பிரமணியன், பொருளாளா் சங்கரசுப்பிரமணியன் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com