கோவில்பட்டி அருகே விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளம், நடுத்தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ராமகிருஷ்ணன் (62). லாரி ஓட்டுநரான இவா், திருநெல்வேலியிலிருந்து விருதுநகா் மாவட்டம் சிவகாசிக்கு லாரியில் பழைய பேப்பா்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தாா்.

திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பில் மோதியதாம். இதனால், ராமகிருஷ்ணன் கீழே குதித்தாராம். அப்போது, அவா் மீது லாரியின் பின்பக்க டயா் ஏறியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com