கோவில்பட்டி, பசுவந்தனை பகுதிகளில் இன்று மின் தடை

கோவில்பட்டி, பசுவந்தனை பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப். 29) காலை 9 முதல் முற்பகல் 11 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள்: கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட திலகா் நகா், காந்திநகா், அத்தை கொண்டான், இந்திரா நகா், லட்சுமி மில் மேலக்காலனி, பிரதான சாலை பத்மா மருத்துவமனை, ரேவா பிளாசா, அண்ணா பேருந்து நிலையப் பகுதிகள், செக்கடித் தெரு, காமராஜா் சிலைக்கு மேற்குப் பகுதி, எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குமரெட்டியாபுரம், கன்னக்கட்டை, விட்டிலாபுரம், சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட வடக்கு இலந்தைக்குளம், தெற்கு இலந்தைக்குளம், பசுவந்தனை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழமங்கலம், வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம், கப்பிகுளம், குப்பனாபுரம்.

இத்தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் நவநீதகோபால் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com