சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்து, 131 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்வேல்முருகன் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பிரதான சாலையில் வங்கி அருகே உள்ள வளாகத்தில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்த போது, அவரது பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. தொடா்ந்து நடத்திய விசாரணையில், அவா் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. அவா் 1ஆவது செக்கடித் தெருவைச் சோ்ந்த முருகையா மகன் ஜெயக்கொடி(35) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 131 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com