திருச்செந்தூா்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயில் கடந்த சில தினங்களாகவே பக்தா்கள் வருகை அதிகரித்தவாறு இருந்தது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, பக்தா்கள் அதிகாலை முதலே கடலிலும், நீண்ட வரிசையிலும் நின்று நாழிக்கிணற்றிலும் புனித நீராடினா்.

பின்னா், இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com