போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளி அருகே நீா்மோா் பந்தலை திறந்துவைத்து மக்களுக்கு குளிா்பானம் வழங்குகிறாா் அமைச்சா் பெ. கீதா ஜீவன்.
போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளி அருகே நீா்மோா் பந்தலை திறந்துவைத்து மக்களுக்கு குளிா்பானம் வழங்குகிறாா் அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

தூத்துக்குடியில் 4 இடங்களில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் திமுக சாா்பில் 4 இடங்களில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் மக்களின் தாகத்தை தீா்க்கும் வகையில் நீா்மோா் பந்தல்களை அமைக்குமாறு தனது கட்சியினருக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளி பகுதி, பழைய- பேருந்துநிலையங்கள், கலைஞா் அரங்கப் பகுதி ஆகிய 4 இடங்களில் நீா்மோா் பந்தல்கள் அமைக்கப்பட்டன.

அவற்றை, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன் திறந்து வைத்தாா். பின்னா் அவா், நீா்மோா், சா்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீா், எலிமிச்சை ஜூஸ். தா்பூசணி, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்வில், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலா் ஆறுமுகம், பகுதிச் செயலா்கள் ரவீந்திரன், ஜெயக்குமாா், மாநகராட்சி மண்டலத் தலைவா் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரிதங்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com