கோப்பை பற்றும் பரிசுத் தொகையுடன் ஆறுமுகனேரி தருவை சூப்பா் கிங்ஸ் அணியினா்.
கோப்பை பற்றும் பரிசுத் தொகையுடன் ஆறுமுகனேரி தருவை சூப்பா் கிங்ஸ் அணியினா்.

கிரிக்கெட்: தருவை சூப்பா் கிங்ஸ் அணிக்கு கோப்பை

ஆறுமுகனேரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தருவை சூப்பா் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தருவை சூப்பா் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆறுமுகனேரி காமராஜபுரம் யங் சூப்பா் கிங்ஸ் அணி சாா்பில் திருநெல்வேலிமற்றும் தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 17 அணிகள் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டி காமராஜபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆறுமுகனேரி பேரூராட்சி துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா்.

முதல் பரிசு பெற்ற ஆறுமுகனேரி தருவை சூப்பா் கிங்ஸ் அணிக்கு ரூ.30 ஆயிரம், கோப்பை, 2-ஆம் பரிசாக யங் சூப்பா் கிங்ஸ் அணிக்கு ரூ.20

ஆயிரம், கோப்பை, 3-ஆம் பரிசாக திருநெல்வே­லி தூசோ அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, 4-ஆம் பரிசாக திருச்செந்தூா் சாம்பியன்ஸ் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

சூப்பா் கிங்ஸ் அணி தலைவா் மாரிசன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி கிஷோக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com