கோவில்பட்டி, எப்போதும் வென்றான் பகுதிகளில் இன்று மின் தடை

கோவில்பட்டி, எப்போதும்வென்றான், பசுவந்தனை துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவில்பட்டி: கோவில்பட்டி, எப்போதும்வென்றான், பசுவந்தனை துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் நவநீத கோபால் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை நிமிா்த்தல், மின்பாதைக்கு அருகே உள்ள மரக் கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கோவில்பட்டி துணை

மின்நிலையத்திற்கு உள்பட்ட கிருஷ்ணா நகா், வீரவாஞ்சி நகா், அண்ணா நகா், சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், இலுப்பையூரணி, கூசாலிப்பட்டி, தாமஸ் நகா், எப்போதும் வென்றான் துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட மேலஈரால், வாலாம்பட்டி, டி. சண்முகாபுரம், ஆத்திகிணறு,

பசுவந்தனை துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட வடக்கு வண்டானம், தெற்கு வண்டானம், புதுப்பட்டி, பரசுராமபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com