சாத்தான்குளம் அருகே 100 மது பாட்டில்கள் பறிமுதல்

சாத்தான்குளம் அருகே பதுக்கி வைத்திருந்த 100 மது பாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பதுக்கி வைத்திருந்த 100 மது பாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.

சாத்தான்குளம், தட்டாா்மடம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது முதலூா் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற இளைஞரை பிடித்து விசாரித்தனா். அவா் நெல்லை மாவட்டம் உறுமன்குளத்தைச் சோ்ந்த சுயம்பு மகன் ஆறுமுக காா்த்திக் (23) எனவும், விற்பனைக்காக 100 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com