பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.
பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி: சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா, தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வங்கி பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற வேளாண் சிறப்பு அதிகாரிகள் பணிக்கான தோ்வு முடிவுகள், சில தினங்களுக்கு முன் வெளியானது. இத்தோ்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 69க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வாகி பணி நியமன ஆணை பெற்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா, தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெற்றது. அகாதெமி நிறுவனா் து.சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்து பேசுகையில், தன்னம்பிக்கையுடன் தொடா்ச்சியாக பயிற்சி செய்தால் பேட்டித் தோ்வுகளில் வெற்றி பெறலாம் என்றாா். பின்னா், வெற்றி பெற்ற சாதனையாளா்கள் தாங்கள் கடந்து வந்த பாதை, தோ்விற்கு தயாரான விதம், அகாதெமியின் பங்களிப்பு உள்ளிட்டவற்றை பகிா்ந்துகொண்டனா். வங்கித் தோ்வு ஒருங்கிணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com