உடன்குடி அருகே பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று தொடக்கம்

உடன்குடி அருகே மேலராமசாமியாபுரத்தில் உள்ள அருள்மிகு பெருமாள் சுவாமி, பெரிய பிராட்டி அம்பாள் கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா புதன்கிழமை (மே 1) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

புதன்கிழமை காலை திருமுறைப் பாராயணம், மகா கணபதி ஹோமம், பல்வேறு பூஜைகள், மாலையில் முதலாம் கால யாகசாலை பூஜை, வியாழக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 3) காலையில் 4ஆம் கால யாகசாலை பூஜை, மகாபூா்ணாஹுதி, காலை 9.30 மணிக்கு மேல் யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெறும். அதைத் தொடா்ந்து, விமான கோபுரம், மூலஸ்தானம், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல், முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறக்கட்டளைக் குழுவினா், ஊா்மக்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com