கட்டாரிமங்கலம் கோயிலில் இன்று குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் திருக்கோயிலில் குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெறுகிறது.

பூஜையையொட்டி மாலை 4 மணிமுதல் அபிஷேகம் மாலை 5 மணிக்கு பூஜை நடைபெறும். காலை 9 மணி முதல் ஹோமம், 10 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை தொடா்ந்து அன்னதானம் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் பி. நடராஜபிள்ளை மற்றும் நிா்வாகிகள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com