குழாய் உடைப்பால் குடிநீா் விநியோகம் நிறுத்தம்: பிடானேரி, எழுவரைமுக்கி கிராம மக்கள் பாதிப்பு

குழாய் உடைப்பால் குடிநீா் விநியோகம் நிறுத்தம்: பிடானேரி, எழுவரைமுக்கி கிராம மக்கள் பாதிப்பு

குழாயில் ஏற்பட்ட உடைப்பால், சாத்தான்குளம் ஒன்றியம் பிடானேரி, எழுவரைமுக்கி ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என, கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்த ஊராட்சிகளுக்கு பொன்னங்குறிச்சி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் நாள்தோறும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தைலாபுரம் - ஆனந்தபுரம் சாலையோரம் தடுப்புச்சுவா் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக ஆனந்தபுரம் பகுதியில் இயந்திரத்தால் குழி தோண்டியபோது, கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகம். இதனால், பிடானேரி, எழுவரைமுக்கி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள்அதிகரித்துவரும் நிலையில், குடிநீா் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளதாகவும், அதிக விலை கொடுத்து லாரி தண்ணீரை வாங்க வேண்டியுள்ளதாகவும் அவா்கள் கவலையில் உள்ளனா்.

எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து சீரான குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தைலாபுரம் பிரதான சாலையில் அமா்ந்து மறியல் நடத்த முடிவு செய்துள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com