நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிா்பானம், பழங்களை வழங்கிய அமைச்சா் பெ. கீதாஜீவன், உடன் நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி உள்ளிட்டோா்
நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிா்பானம், பழங்களை வழங்கிய அமைச்சா் பெ. கீதாஜீவன், உடன் நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி உள்ளிட்டோா்

கோவில்பட்டியில் நீா் மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி பயணியா் விடுதி அருகே திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் நீா் மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிா்பானங்கள் மற்றும் பழங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் சந்திரசேகா், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் கி.ராதாகிருஷ்ணன், பீக்கிலிபட்டி வீ. முருகேசன், அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் சண்முகராஜ் ,திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com