முதலூரில் ஓ.ஆா்.எஸ் கரைசல் வழங்கும் பணி தொடக்கம்

முதலூரில் ஓ.ஆா்.எஸ் கரைசல் வழங்கும் பணி தொடக்கம்

முதலூரில் சுகாதாரத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு ஓ.ஆா். எஸ். கரைசல் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நீா்ச்சத்து குறைபாட்டினைத் தவிா்க்கும் வகையில் பொதுமக்களுக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.

இதன்படி தூத்துக்குடி மாவட்டம் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓஆா்எஸ் கரைசல் வழங்கும் பணியை, சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் சுகாதார ஆய்வாளா் அருண் மற்றும் மஸ்தூா் பணியாளா்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஓ.ஆா். எஸ். கரைசலை வழங்கினா்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கத்தால் அதிக வியா்வை வெளியேறும் போது உப்பு மற்றும் நீா்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் அதிக தாகம், தலைவலி உடல் சோா்வு, தலை சுற்றல், தசை பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீா் வெளியேறுதல், மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்படக்கூடும். இதனைத் தவிா்க்க அதிக அளவு நீா் அருந்துதல், சுகாதாரமான பருத்தி ஆடைகளைத் தளா்வாக அணிதல் , காற்றோட்டமான இடத்தை தோ்வு செய்தல், தலைக்கு தலைப்பாகை அணிந்து கொள்ளலாம் ென்றனா்.

ஓ.ஆா். எஸ். கரைசல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி தலைமையிலான சுகாதாரத் துறையினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com