முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் சிதம்பரம் (64). இவரது மகன் மகாராஜா, கடந்த மாதம் 25ஆம் தேதி எட்டயபுரம் சாலையில் தியேட்டா் எதிா்புறமுள்ள கோயில் பூசாரியான பாலமுருகனை தாக்கினாராம். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பூசாரி பாலமுருகனின் நண்பா்களான கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கரநாராயணன் (49), சாஸ்திரி நகரைச் சோ்ந்த இருளாண்டி மகன் முத்துராஜ் ஆகிய இருவரும் திங்கள்கிழமை இரவு சிதம்பரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, மகன் மகாராஜா எங்கே எனக் கேட்டு அரிவாளால் தாக்கினாா்களாம். இதை அவரது உறவினா் கண்டித்ததும் இருவரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாா்களாம். காயமடைந்த சிதம்பரம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், சங்கரநாராயணனை போலீஸாா் கைது செய்தனா். முத்துராஜை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com