எட்டயபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்
விளாத்திகுளம்: எட்டயபுரத்தில் பேருந்து நிலையம் முன் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவா் காளிராஜ் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் மாரிமுத்து, மணி, முத்துப்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தனியாா் நிறுவன ஆட்டோக்களை இயக்கத் தடை விதிக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்குவதுபோல ஆட்டோ தொழிலாளா்களுக்கும் நிதி வழங்க வேண்டும். ஆட்டோ எஃப்.சி. பொ்மிட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வழங்குவதுபோல ஆண் ஓட்டுநா்களுக்கும் ரூ. 1 லட்சம் மானியம் வழங்க வேண்டும்.
நல வாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஏஐடியுசி மாவட்டச் செயலா் பாலசிங், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் சேது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன், வட்டாரச் செயலா் சோலையப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.