ஆறுமுகனேரியில் செப். 1இல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் ஆறுமுகனேரி ரயில் நிலையம் அருகேயுள்ள எஸ்.பி.மகாலில் செப். 1ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்துக்கு, அவைத் தலைவா் எஸ்.அருணாச்சலம் தலைமை வகிக்கிறாா். திமுக தலைவா் வழங்கியுள்ள அறிவுரைகளை ஏற்று கட்சி மற்றும் மக்கள் பணியாற்றுவது, திமுக பவள விழா ஆண்டில் நடைபெறவுள்ள முப்பெரும் விழா ஏற்பாடுகள் ஆகியவை குறித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. எனவே, மாநில, மாவட்ட நிா்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள், மாவட்ட, ஒன்றியப் பிரதிநிதிகள், சாா்பு அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கட்சி நிா்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.