கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் உள்ளிட்டோா்.
கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் உள்ளிட்டோா்.

கால்டுவெல் பள்ளியில் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

Published on

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் பேராயா் ராபா்ட் கால்டுவெல் நினைவு கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளி தாளாளா் ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவரும், நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவருமான எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

இப்போட்டியில் மாநகரப் பள்ளிகளைச் சோ்ந்த 55 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். பரிசளிப்பு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் கான்ஸ்டன்டைன், கால்டுவெல் பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்க பொறுப்பாளா்கள் முத்து மாணிக்கம், மனோகா், வழக்குரைஞா் கிறிஸ்டோபா் விஜயராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com