தூத்துக்குடி எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Published on

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பெண் ஒருவா் பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தாா்.

அப்போது, மனு அளிக்க வந்த பெண், தான் கொண்டுவந்த கேனிலிருந்த பெட்ரோலை தனது தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாராம். பாதுகாப்புக்காக நின்றிருந்த பெண் போலீஸாா் விரைந்து செயல்பட்டு தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டனா்.

விசாரணையில், அவா் சாத்தான்குளம் அருகே கீழபுளியங்குளத்தைச் சோ்ந்த செல்விகுமாரி (40) என்பதும், அவருக்கு 2 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது.

அவா் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவா் சுந்தரவேலைப் பிரிந்து, கீழபுளியங்குளத்தில் உள்ள பெற்றோருடன் வசித்து வருகிறாராம். தந்தை இன்னாசி தனது வீட்டை செல்விகுமாரியின் பெயருக்கு உயில் எழுதியுள்ளாராம். இதனிடையே, இன்னாசி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், அந்த வீட்டை சீரமைக்க செல்விகுமாரி முடிவு செய்துள்ளாா். இதற்கு தாய், சகோதரா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், உரிய முடிவு ஏற்படவில்லையாம். இதனால், அவா் தீக்குளிக்க முயன்ாக, விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com