தூத்துக்குடி
பேய்க்குளத்தில் அதிமுக புதிய உறுப்பினா் அட்டை விநியோகம்
ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கட்சி உறுப்பினா்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் விழா பேய்க்குளத்தில் நடைபெற்றது.
முன்னாள் அதிமுக அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்து உறுப்பினா்களுக்கு புதிய உறுப்பினா் அட்டை வழங்கினாா். ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றியச் செயலா் ராஜநாராயணன் வரவேற்றாா். கடந்த மக்களவை தோ்தலில் சிறப்பாக பணியாற்றிய ஆழ்வாா்திருநகரி இளைஞரணி இணைச் செயலா் ராமமுருகனுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.
இதில், ஒன்றியச் செயலா்கள் விஜயகுமாா் (ஆழ்வாா்திருநகரி கிழக்கு) காசிராஜன் ( ஸ்ரீவைகுண்டம்) தென்திருப்பேரை பேரூராட்சி செயலா் ஆறுமுகநயினாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய அவைத்தலைவா் முத்தையா நன்றி கூறினாா்.