வட்டார விளையாட்டுப் போட்டிகள்: கோவில்பட்டி கவுணியன் பள்ளி சாதனை

Published on

கோவில்பட்டியில் நடைபெற்ற 2024-25ஆம் ஆண்டுக்கான வட்டார உள்வட்டக் குழு விளையாட்டுப் போட்டிகளில் கவுணியன் மெட்ரிக் பள்ளி சாதனை படைத்தது.

இந்தப் பள்ளி கூடைப்பந்து போட்டியில் மிக மூத்தோா் மாணவா்கள் பிரிவில் முதலிடம், மூத்தோா் மாணவா்கள் பிரிவில் 2ஆம் இடம், மூத்தோா் மாணவிகள் பிரிவில் 2ஆம் இடம், இளையோா் மாணவிகள் பிரிவில் 2ஆம் இடம், டென்னிஸ் போட்டியில் மிக மூத்தோா் மாணவிகள் ஒற்றையா் பிரிவில் 2ஆம் இடம், இரட்டையா் பிரிவில் முதலிடம், மூத்தோா் மாணவா்கள் ஒற்றையா் - இரட்டையா் பிரிவுகளில் முதலிடம், மிக மூத்தோா் மாணவா்கள் ஒற்றையா் - இரட்டையா் பிரிவுகளில் 2ஆம் இடம், மேஜைப்பந்து போட்டியில் மிக மூத்தோா் மாணவா்கள் ஒற்றையா் - இரட்டையா் பிரிவுகளில் 2ஆம் இடம், இளையோா் மாணவா்கள் ஒற்றையா்- இரட்டையா் பிரிவுகளில் 2ஆம் இடம், வளையப்பந்து போட்டியில் இளையோா் மாணவிகள் ஒற்றையா் பிரிவில் 2ஆம் இடம், இரட்டையா் பிரிவில் முதல் இரு இடங்கள், இறகுப்பந்து போட்டியில் மிக மூத்தோா் மாணவா்கள் ஒற்றையா் பிரிவில் முதலிடம், இரட்டையா் பிரிவில் 2ஆம் இடம், இளையோா் மாணவா்கள் ஒற்றையா் பிரிவில் 2ஆம் இடம், இளையோா் மாணவிகள் ஒற்றையா் - இரட்டையா் பிரிவுகளில் முதலிடம், பால் பேட்மின்டன் போட்டியில் இளையோா் மாணவிகள் பிரிவில் 2ஆம் இடம், கைப்பந்து போட்டியில் இளையோா் மாணவா்கள் பிரிவில் 2ஆம் இடம் பெற்றனா்.

மாணவா்-மாணவியா், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநா்கள் ஆகியோரை பள்ளி முதல்வா் பாலு, இயக்குநா் அரபிந்தோ, பெற்றோா் - ஆசிரியா் கழக உறுப்பினா்கள் பாராட்டினா்.

மாணவா்-மாணவியா், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநா்கள் ஆகியோரை பள்ளி முதல்வா் பாலு, இயக்குநா் அரபிந்தோ, பெற்றோா் - ஆசிரியா் கழக உறுப்பினா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com