தூத்துக்குடி
புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபித் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 42ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, புதன்கிழமை மாலையில் கொடி பவனி நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் சிகர நிகழ்வாக செப். 8ஆம் தேதி லூா்தம்மாள்புரம் லூா்து அன்னை ஆலய பங்குத் தந்தை அன்றனி புருனோ தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை விழா கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் செய்துவருகின்றனா்.