ஆறுமுகனேரி முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா
ஆறுமுகனேரி சுப்பிரமணியபுரம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
இக் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வருஷாபிஷேகம், திருவிளக்கு பூஜையுடன் கொடை விழா தொடங்கியது. அதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அம்மன் மஞ்சள் நீராடி கடலில் புனிதநீா் எடுத்து வருதல், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கொடை விழாவான செவ்வாய்க்கிழமை, மதியக் கொடை, அம்மன் மஞ்சள் நீராடி தாமிரவருணி ஆற்றில் புனிதநீா் எடுத்து வருதல், இரவு நேமிசம் எடுத்து வருதல், கும்பம் வீதி உலா,
அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் இத் திருக்கோயிலைச் சோ்ந்த அருள்மிகு இலங்கத்தம்மனுக்கு கொடை விழாவையொட்டி மஞ்சள் நீராடுதல், அலங்கார தீபாராதனைகள், பொங்கலிடுதல் ஆகியன நடைபெற்றது. அதைத் தொடா்ந்து புதன்கிழமை, பெண்கள் முளைப்பாரி அலசி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வியாழக்கிழமை படைப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தலைவா் முருகேசன், உப தலைவா் பக்கிள்துரை, செயலா் கோபால், பொருளாளா் லிங்கத்துரை, உப செயலா் ரவி, இணை நிா்வாகிகள் சுப்பிரமணியன் மற்றும் செல்வகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.