தூத்துக்குடியில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திர செயல்பாடு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டை ஆட்சியா் கோ. லட்சுமிபதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழக சுற்றுச்சூழல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதில் ரூ. 5 செலுத்தினால் ஒரு மஞ்சப்பையை பொதுமக்கள் பெறும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், மஞ்சப்பை திட்டம் மூலம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பைகளின் பயன்பாடு குறையும். மேலும், மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாக அமையும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், துணை ஆட்சியா் (பயிற்சி) பிரபு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஹேமந்த்ஜோசன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் ரங்கசாமி, உதவிப் பொறியாளா்கள் முரளிகண்ணன், பிரதீப் பாண்டியன், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com