மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 11.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்

சாத்தான்குளம் வட்டம் படுக்கப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமிவ் 121 பேருக்கு ரூ. 11.30 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 11.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்

சாத்தான்குளம் வட்டம் படுக்கப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமிவ் 121 பேருக்கு ரூ. 11.30 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு ஊராட்சித் தலைவா் தனலட்சுமி சரவணன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, ஒன்றிய கவுன்சிலா் ஜோதி, மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் ஹபிபூா் ரகுமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், முன்னோடியாக பெறப்பட்ட 220 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு பதிலளிக்கப்பட்டது. மாவட்ட வளா்ச்சித் திட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வரியா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 2 கா்ப்பிணிகளுக்கு மருத்துவக் காப்பீடு பெட்டகம், 2 பேருக்கு மருத்துவப் பெட்டகம் என 121 பேருக்கு ரூ. 11.30 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா், சுகாதாரத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணா்வு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்த கண்காட்சி, சிறப்பு மருத்துவ முகாமைப் பாா்வையிட்டாா்.

சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் சுரேஷ், மண்டல துணை வட்டாட்சியா் தாகீா்அகமது, வட்ட வழங்கல் அலுவலா் பிரபு, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கோமதிசங்கா், பள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் சித்ரா, வட்டார மருத்துவ அலுவலா் ஐலின்சுமதி, சுகாதார ஆய்வாளா் மந்திரராஜன், கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ்ராஜா, ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் ரதிகலா வரவேற்றாா். சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com