தலைமை அஞ்சலகங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதாா் சேவை

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நடைபெறும்.

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நடைபெறும்.

இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையங்கள் தற்போது வார நாள்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் ஆதாா் சேவையின் தேவையைக் கருத்தில் கொண்டும், பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்குச் செல்பவா்களுக்கு பயன்பெறும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதாா் மையங்கள் செயல்படும். இங்கு ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com