புகையிலைப் பொருள்கள்விற்பனை: இருவா் கைது

தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீஸாா் மேலூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் கந்தசாமி (41) என்பவா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 6 கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா்.

இதேபோல, தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் ஆதாம் அலி தலைமையிலான தனிப்படை போலீஸாா் ஆரோக்கியபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 409 புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா். இதுதொடா்பாக, அப்பகுதி ஜோசப்செல்வராஜ் மகன் அந்தோணிமுத்துவை (52) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com