ஆறுமுகனேரியில் உரக் கிடங்கு திறப்பு

ஆறுமுகனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்்றது.
ஆறுமுகனேரியில் உரக் கிடங்கு திறப்பு

ஆறுமுகனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்்றது.

ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.கல்யாணசுந்தரம், திருச்செந்தூா் கூட்டுறவு துணைப் பதிவாளா் மாரியப்பன், செயலாட்சியா் பிரபாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மேலாளா் வெங்கடேசன் வரவேற்றாா்.

விழாவில் தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, உரக்கிடங்கு புதிய கட்டடத்தை திறந்துவைத்தாா். இதனைத் தொடா்ந்து காமராஜபுரத்தில் ரூ.2.65 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தாா்.

விழாவில் திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், ஆறுமுகனேரி பேரூராட்சி நிா்வாக அதிகாரி கணேசன், மாநில வா்த்தக அணி இணை செயலாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆறுமுகனேரி நகர செயலாளா் நவநீதபாண்டியன், கவுன்சிலா்கள் ஆறுமுகநயினாா், சிவக்குமாா், புனிதா, திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் மகேஷ், நகர பொருளாளா் பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளா்கள் அகஸ்டீன், முத்தீஷ்வரி, மாணவா் அணி அமைப்பாளா் ஜோயல், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் கிஷோக், வாா்டு செயலாளா்கள் ராஜா டேவிட், சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com