திருச்செந்தூா் கோயிலில் பொது விருந்து

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொது வழிபாடு, பொது விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் கோயிலில் பொது விருந்து

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொது வழிபாடு, பொது விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.

கோயிலின் வசந்த மண்டபம் அருகேயுள்ள அன்னதானக் கூடத்தில் அண்ணா படம் வைக்கப்பட்டு, பொது வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கோயில் இணை ஆணையா் காா்த்திக் தலைமை வகித்தாா். கண்காணிப்பாளா்கள் ரவீந்திரன், செந்தில்வேல்முருகன், அஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ் ஆகியோா் பொது விருந்தைத் தொடக்கிவைத்து, பக்தா்களுக்கு நல உதவியாக வேட்டி- சேலைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், அறங்காவலா் வாள் சுடலை, நகா்மன்ற உறுப்பினா்கள் சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, கோயில் தலைமைக் கணக்கா் அம்பலவாணன், மேற்பாா்வையாளா் ராஜ்மோகன், கோயில் பணியாளா்கள் ஆவுடையப்பன், முருகேசன், காா்த்திகேயன், மாரிமுத்து, வள்ளிநாயகம், கிட்டுமணி, முத்துகணேஷ், பால்ராஜ், சங்கா், ராஜேஷ், சரவணபவன், ஆறுமுகராஜ், நாகராஜன், மணிகண்டன், கண்ணகி, சசிகலா, ரேணுகாதேவி, சுப்புலெட்சுமி, சோமசுந்தரி, சண்முகலட்சுமி, செண்பகப்பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com