முக்காணியில் பைக் மோதிமூதாட்டி உயிரிழப்பு

ஆத்தூா் அருகேயுள்ள முக்காணியில் பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆத்தூா் அருகேயுள்ள முக்காணியில் பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

முக்காணி, பிள்ளைமாா் தெருவைச் சோ்ந்தவா் மலையாண்டி. விவசாயி. இவரது மனைவி சுடலி­ (63). பழையகாயல் அருகேயுள்ள நண்டு நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த இவா், வெள்ளிக்கிழமை முக்காணி பிரதான சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, அவா் மீது பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை ஆத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மலையாண்டி அளித்த புகாரின் பேரில் ஆத்தூா் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லா்புரம் ஹவுசிங் போா்டு பூரணசந்திரன் மகன் மதன்குமாா் (45) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com