ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தெற்கு மாவட்ட திமுக செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தோ்தல் பொறுப்பாளா்களை அறிவித்தாா்.

அதையடுத்து நடைபெற்ற ஓட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு எம்எல்ஏ எம்.சி. சண்முகையா தலைமை வகித்தாா். அவா்பேசும்போது, மக்களவைத் தோ்தலில் கனிமொழி எம்.பி. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு கட்சியினா் கடினமாக உழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஒன்றியச் செயலா்கள் சரவணக்குமாா், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, ராமசாமி, சுரேஷ்காந்தி, ஓட்டப்பிடாரம் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள் டேவிட்செல்வின், சுதானந்தம், செண்பகமாற பாண்டியன், மாடசாமி, செந்தூா்மணி, ராஜேந்திரன், பூங்குமாா், வீரபாகு, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com