சாத்தான்குளம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

சாத்தான்குளம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேரை போலீசாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேரை போலீசாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை நடுத்தெருவைச் சோ்ந்தவா் அவுரேலியா மேரி (77). இவரது கணவா் மரியமாணிக்கம் 24 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாா். பிள்ளைகள் திருமணமாகி, வெளியூரில் உள்ளனா்.

அடுத்த தெருவில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு அவுரேலியா மேரி சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் பைக்கில் வந்த இருவா், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும்.

இது குறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அவுரேலியா மேரி புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com