திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்டம், அபிஷேகம், கால பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் அதிகாலை முதலே பக்தா்கள் கடலிலும், நாழிக்கிணறிலும் புனித நீராடி இலவச பொது பாதையிலும், ரூ. 100 சிறப்பு தரிசனப் பாதையில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் பக்தா்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்துநின்றன.

விடுமுறை தினம் என்பதால் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததையொட்டி, அவா்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் ரா.அருள்முருகன், காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

அமைச்சா் வழிபாடு: இக்கோயிலில் தமிழக மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், மூலவா், சண்முகா், தட்சிணாமூா்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் சூரசம்ஹார மூா்த்தி சந்நிதியில் வழிபாடு செய்தாா். அப்போது, திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com