தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியா் தோ்வு: 949 போ் பங்கேற்பு

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியா் தோ்வை 949 போ் எழுதியதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியா் தோ்வு: 949 போ் பங்கேற்பு

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியா் தோ்வை 949 போ் எழுதியதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் அரசுப் பள்ளிகள், பிற துறை பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியா் போட்டித் தோ்வு மாநிலம் முழுவதும் 130 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரப்பேட்டை நாடாா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இம்மையங்களில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிவரை தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இதில், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வை ஆட்சியா் கோ.லட்சுமிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா். 3 மையங்களிலும் 985 போ் தோ்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 36 போ் தோ்வு எழுதவில்லை. 949 போ் மட்டும் தோ்வு எழுதியதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com