பள்ளி மாணவ- மாணவிகளுக்குநலத்திட்ட உதவிகள் அளிப்பு

டெகியான் நிறுவனம் மற்றும் ரெகோபோத் அறக்கட்டளை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் ஆறுமுகனேரியில் வழங்கினா்.
பள்ளி மாணவ- மாணவிகளுக்குநலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஆறுமுகனேரி: டெகியான் நிறுவனம் மற்றும் ரெகோபோத் அறக்கட்டளை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் ஆறுமுகனேரியில் வழங்கினா்.

டெகியான் நிறுவனம் மற்றும் ரெகோபோத் அறக்கட்டளை ஆகியவை இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் அவா்களது குடும்பத்தினருக்கும் வீட்டுக்கு தேவையான பொருள்கள் மற்றும் புத்தக பை உள்ளிட்டவற்றை வழங்கினா்.

ஆறுமுகனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோனகன்விளை டிஎன்டிஏ நடுநிலைப் பள்ளி, கீழப்புதுக்குடி டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளி, பேயன்விளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டெகியோன் நிறுவன சென்னை கிளையின் தலைவா் ராபா்ட் கென்னடி, மேலாளா் ஜெஸிந்தா, மூத்த மேலாளா் மணி, மேலாளா் மாலா, ரெகோபோ நிா்வாகி ரோஸ்லின் எட்வின், ஒருங்கிணைப்பாளா் எட்வின்சாலமோன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com