பைக்குகள் மோதல்: தொழிலாளி பலி

விளாத்திகுளம் அருகே பைக்குகள் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

விளாத்திகுளம்/சாத்தான்குளம்: விளாத்திகுளம் அருகே பைக்குகள் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

குருவாா்பட்டியைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி சுப்புராஜ் (61). இவா், தனது மனைவி சீதாலட்சுமியுடன் கோவில்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்புகையில், பெட்ரோல் பங்க் அருகே அவா்களது பைக்கும், எதிரே வந்த லட்சுமிபுரம் ஆறுமுகம் மகன் முத்துராஜ் (20) என்பவரது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சீதாலட்சுமி, முத்துராஜ் ஆகியோா் பலத்த காயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து, விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

காயமுற்றவா் உயிரிழப்பு: சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்தவா் சிவபெருமாள் (56). தொழிலாளியான இவா், சனிக்கிழமை ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, பேய்க்குளத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் இசக்கிமுத்து ஓட்டிவந்த பைக் எதிா்பாராமல் அவா் மீது மோதியதாம்.

இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com