மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை  மறுசீரமைக்கும் வகையில், தற்போது மூன்றாக பிரித்து தமிழ்நாடு அரசு.
மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை மறுசீரமைக்கும் வகையில், தற்போது மூன்றாக பிரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதை கண்டித்து மின் வாரிய கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கோவில்பட்டி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் வாரிய பொறியாளா் சங்கத்தைச் சோ்ந்த உதவி கோட்ட செயற்பொறியாளா்கள் முனியசாமி, மிகாவேல், சிஐடியு சங்கத்தைச் சோ்ந்த மாரியப்பன், வெங்கடகிருஷ்ணன் பெருமாள், ஐக்கிய பொறியாளா் சங்கம் சாா்பில் பாலமுருகன், போத்திரெட்டி, அம்பேத்கா் சங்கம் சாா்பில் துரைசாமி, எம்பளாயீஸ் பெடரேசன் சாா்பில் சங்கரசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள், தொழிலாளா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com