முன்னாள் மாணவா்கள் மன்ற கூட்டம்

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள், பெண்கள் துவக்க பள்ளி முன்னாள் மாணவா் மன்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மாணவா்கள் மன்ற கூட்டம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள், பெண்கள் துவக்க பள்ளி முன்னாள் மாணவா் மன்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளியின் தாளாளா் செ.ரெ. வெனிசு குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் மன்ற துணைத் தலைவரும், ஊராட்சித் தலைவருமான திருக்கல்யாணி வரவேற்றாா். மன்ற தலைவா் லூா்துமணி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து நிா்வாகிகள் கலந்துரையாடல் நடந்த்து.

கூட்டத்தில் . பள்ளியில் உடற்பயிற்சி கூட ம்அமைத்தல், கூடைப்பந்து மைதானத்தை சீரமைத்தல், கல்வி-விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசளித்தல், மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்தல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com