விளாத்திகுளம் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு

விளாத்திகுளம் சப் டிவிஷன் புதிய டி.எஸ்.பி.யாக எஸ்.ராமகிருஷ்ணன் (50) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் சப் டிவிஷன் புதிய டி.எஸ்.பி.யாக எஸ்.ராமகிருஷ்ணன் (50) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விளாத்திகுளம் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வி. ஜெயச்சந்திரன், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக திருவாரூா் மாவட்டத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த எஸ்.ராமகிருஷ்ணன், விளாத்திகுளத்துக்கு மாற்றப்பட்டாா். அவா் ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா் டி.எஸ்.பி. எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது: மக்களின் புகாா் மனுக்கள் மீது உடனடித் தீா்வு காணப்படும். அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கவும், சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com