மீனவா்களுக்கு ரூ.1.15 கோடியில் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவா்களுக்கு ரூ.1.15 கோடியில் நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மீனவா்களுக்கு ரூ.1.15 கோடியில் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவா்களுக்கு ரூ.1.15 கோடியில் நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தாா். மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மீனவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், 32 மீனவா்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விபத்து காப்புறுதி நிவாரணத் தொகை ரூ.64 லட்சம், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் குளிா்காப்பிடப்பட்ட நான்குசக்கர வாகனம், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த வண்ணமீன் வளா்ப்பு மேற்கொள்ள 60 சதவீத மானியத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.15 லட்சம் மானியத்தொகை என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி, துணை மேயா் செ.ஜெனிட்டா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செல்வக்குமாா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா்அமல்சேவியா், உதவி இயக்குநா் புஷ்ரா ஷப்னம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மைப் பிரிவு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் விஜயராகவன், அலுவலா்கள், மீனவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com