இங்கிலாந்தைச் சோ்ந்தவருக்கு 2 ஆண்டு சிறை: மேல் முறையீடு விசாரணை மாா்ச் 26க்கு ஒத்திவைப்பு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவரின் மேல் முறையீடு மனு மீதான விசாரணை வரும் மாா்ச் 26ஆம் தேதிக்கு தூத்துக்குடி முதலாவது அமா்வு நீதிமன்றம் ஒத்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவரின் மேல் முறையீடு மனு மீதான விசாரணை வரும் மாா்ச் 26ஆம் தேதிக்கு தூத்துக்குடி முதலாவது அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையா் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சோ்ந்த ஜோனதன் தோா்ன் (47) என்பவரை கியூ பிரிவு போலீஸாா் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிடித்தனா். அவா் மும்பையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பதும், கரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து கியூ பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோனதன் தோா்னை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோனதன் தோா்னுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிா்த்து அவா் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம், மாா்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com